தன் பள்ளியின் மாணவிகளுக்கு நடந்த குற்றம் குறித்த துடிப்பைவிட, தங்கள் பள்ளியின் பெயர் பழுதுபடாமல் பார்த்துக்கொள்ளும் மனநிலையையே பள்ளியின் அறிக்கை காட்டுகிறது. மேலும், பள்ளியின் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும், `பள்ளியின் மாண்பு காக்கப்பட வேண்டும்' என்ற அரற்றலே உள்ளதே தவிர, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர்களின் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை இல்லை.