நான் நிறைய எதிர்ப்புகளைச் சமாளிச்சு எதிர்பார்ப்புகளோட காதல் திருமணம் முடிச்சவ. சமீபத்துல இடிமாதிரி என் கணவரைப் பத்தின ஒரு உண்மை தெரிய வந்துச்சு. வேற வேற பெயர்கள்ல நிறைய பேஸ்புக் கணக்குகள் தொடங்கி, பெண்களோட செக்ஸ் உரையாடல்கள் வச்சுக்கிட்டிருக்கார்... ஒருமுறை அவரோட லேப்டாப்பை உபயோகிக்கும்போது அடுத்த இடி விழுந்துச்சு. என் மொபைல்ல நான் வச்சிருந்த என் தோழிகள், என் உறவினர்கள் படங்களையெல்லாம் எடுத்து ஆபாசமா மார்பிங் செஞ்சு வச்சிருக்கார். நான் என்ன செய்யனும்... என் கணவரை மீட்பது எப்படி?