In Australia pharmacists dispense prescription medications and provide healthcare advice, educating the community on the use of medicines and disease prevention. - ஆஸ்திரேலியாவில், மருந்தாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குகிறார்கள், பாதுகாப்பான மருந்து பயன்பாடு மற்றும் நோய் தடுப்பு குறித்து சமூகத்திற்கு கல்வி புகட்டுகின்றனர். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்பட்சத்தில், உங்கள் மருத்துவர் மருந்துகளை பரிந்துரைத்தால், அடுத்தபடியாக நீங்கள் அருகிலுள்ள மருந்தகத்திற்குச் செல்வீர்கள். இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலியாவின் மருந்தக கட்டமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் மருந்தகத்திற்குச் செல்லும்போது என்னென்னவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதையும் பார்ப்போம்.